திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, மேல்புழுதியூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சுமார் ரூ48இலட்சம் மதிப்பீட்டில் நெற்களம், குளங்கள் தூர் வருதல், புதிய அங்கன்வாடி கட்டிடம், பள்ளி கழிவறை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மாவட்ட திமுக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு பெ கிரி ஆய்வு மேற்கொண்டு இனிப்புகளை வழங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.


உடன் செங்கம் மத்திய ஒன்றிய செயலாளர் அ ஏழுமலை, செங்கம் ஒன்றிய திமுக செயலாளர்கள் த செந்தில்குமார், த மனோகரன், ஒன்றிய துணைச் செயலாளர் கணபதி, மாவட்ட பிரதிநிதி சேகர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன்,மல்லிகா,முனியன் , ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment