திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 June 2023

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.


திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த மக்களும் பெருமளவு கிரிவலம் செல்ல வருவதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக வருகின்ற ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வேலூர் மற்றும் திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பௌர்ணமி தினங்களில் மட்டும் சென்னையிலிருந்து ஒரு சிறப்பு ரயிலும், வேலூரில் இருந்து ஒரு சிறப்பு ரயிலும், விழுப்புரத்தில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.   




           

செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:

Post a Comment

Post Top Ad