திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து ஊர் திரும்ப போதியளவு பேருந்து இயக்கப்படாததால் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் சென்று பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கோவிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


இந்நிலையில் சென்னைக்கு திரும்ப பேருந்து நிலையம் வந்த பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த போதும் பேருந்து வரவில்லை.இதனால் கட்டுக்கடங்காத கூட்டத்தில் முதியோர்கள், சிறுவர்கள், குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகின. ஆத்திரமடைந்த பக்தர்கள் திருவண்ணாமலை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப் வலியுறுத்தி நேற்று காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் T.R.கலையரசு.
No comments:
Post a Comment