திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்காப்பேட்டை, தளவநாயகன்பேட்டை, ஆகிய இரண்டு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு தளவாநாயகர் என்பவரால் வெட்டப்பட்டு அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தளவாநாயகன்பேட்டை, துக்காப்பேட்டை ஆகிய இரு பகுதிகளில் உள்ள குளம் தற்போது நான்கு புறமும் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் அடுக்கு மாடிகள் கட்டபட்டு அவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் விடப்படுகின்றன.


மேலும் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளின் கழிவுகள் , கண்ணாடிகள், குப்பைகளை கொட்ட படுவதால் அந்த குளம் துர்நாற்றமும் குப்பைகளுடன் காட்சியளிக்கும் குளங்களை மீட்டு முறையாக தூர்வாரி நீர் மாசுபட்டை தவிர்த்து ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க படுமா? என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment