கடந்த மாதம் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவில், செல்வ-கருணாநிதி வழங்கிய பாரத சொற்பொழிவும், பாண்டவர் பிறப்பு, வீரபாஞ்சாலி தோற்றம் ஆகியன நடைபெற்றது.இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், அர்ச்சுனன் தபசு மரம் ஏறி பாசுபதம் என்ற அஸ்திரம் வேண்டி ஒற்றைக்காலில் நின்றவாறு தவம் செய்தார்.


தொடர்ந்து அர்ச்சுனன் வில்வ இலைகளையும், திருமணமாகாத பெண்களுக்கு மஞ்சள் குங்குமம்,எலுமிச்சை பழங்களையும் குழந்தை வரம் கோரும் பக்தர்களிடையே வீசினார். இதனைத் தொடர்ந்து, தாலிச் சரடை வீசினார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விளாங்காடு, கீழ்நர்மா, கீழ்கொடுங்காலூர், ஆரியாத்தூர், வழூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வெம்பாக்கம் செய்தியாளர் MS.பழனிமலை
No comments:
Post a Comment