குரங்குகளின் அட்டகாசத்தால் செங்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 June 2023

குரங்குகளின் அட்டகாசத்தால் செங்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல் செங்கம் பகுதியில் நெடுஞ்சாலையில் குரங்களின் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் அவதி. செங்கம் - திருவண்ணாமலை சாலை மேல்செங்கம் மத்திய மாநில விதைப்பண்ணை பகுதியில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தில் இருந்த அழுகிய பழம், விற்பனை ஆகாத பழங்கள், விவசாய நிலத்தில் விளைந்த காய், கனிகளை குரங்குகளுக்கு அளித்து வந்தனா். மேலும், இரு சக்கர வாகனம், காா்களில் செல்வோரும் தின்பண்டங்களை குரங்குகளுக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்தினா். 


அதனால், குரங்குகள் இனப்பெருக்கம் அதிகரித்து மேல்செங்கம் முதல் தண்டம்பட்டு வரை சாலையோரம் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவைகள் காா், லாரி போன்ற வாகனங்கள் வரும்போது வாகனத்தை பின்தொடா்ந்து ஓடுகின்றன. அதனால், வாகனத்தில் செல்வோா் தின்பண்டங்களை சாலையில் போடுகிறாா்கள். அவற்றை சாப்பிட குரங்குகள் ஒன்றோடு ஒன்ற குரங்குகள் அடித்து கொள்கின்றன. 


அப்போது அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலை நடுவில்குரங்குகள் கூட்டத்தை பார்த்து குரங்கு மேல் ஏற்றி விடுவோமோ என்ற அச்சத்தில் தடுமாற்றத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே போல செங்கத்தில் இருந்து நீப்பத்துறை செல்லும் சாலையிலும் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குரங்கு களை பிடித்து வனத்துக்குள் விட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


- செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad