திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் செங்காடு கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022_2023 ஆண்டு ரூபாய் 12 லட்சம் 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.


அதனைத் தொடர்ந்து சின்ன செங்காடு கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021_2022 ஆண்டு ரூபாய் 12 லட்சம் 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி, முன்னாள் சட்டமன்ற கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சி.கே.ரவிக்குமார், திராவிட முருகன், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன், ஒப்பந்ததாரர் கோபு, மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment