திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே காஞ்சிபுரம் பல்லவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தேவா (வயது 26). இவர் பேன்சி கடையில் வேலை செய்து வந்தார். தேவா நண்பர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூருக்கு சென்றார். அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் தேவா குளித்து கொண்டிருந்தார்.


அப்போது தேவா கிணற்றில் மூழ்கினார் நீண்ட நேரம் ஆகியும் தேவா மேலே வராததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தேவாவை கிணற்றில் நண்பர்கள் தேடினர். அவர் கிடைக்காததால் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்து தேவாவை தேடினர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு தேவாவை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment