திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, செய்யாறு அடுத்த நர்மா பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ரேவதி செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு செல்வதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு பன்னீர்செல்வம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் ரேவதியிடம் பணம் கேட்டுள்ளார்.


அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் அருகில் இருந்த கத்தியை எடுத்து ரேவதியின் தலையால் வெட்டினார். இதில் ரேவதி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதனைக் கண்ட உறவினர்கள் படுகாயம் அடைந்த ரேவதியை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ரேவதி அனக்காவூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை இன்று கைது செய்தனர். பணம் தர மறுத்த மனைவியை கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment