திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் செங்கம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் எச். சாதிக் பாஷா தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.


இக்கூட்டத்தில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் குடிநீர், கழிவு நீர் கால்வாய், தெருவிளக்குகள், சாலை வசதிகள் உள்பட அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது .
மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு இளநிலை எழுத்தர் பிரசாந்த் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் T.R.கலையரசு
No comments:
Post a Comment