ஹலோ பிளாக் செய்யும் எந்திரம் திருடியவர் கைது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 June 2023

ஹலோ பிளாக் செய்யும் எந்திரம் திருடியவர் கைது.


செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவரது மனைவி கோமதி. இவர்கள் சொந்தமாக அதே பகுதியில் ஹாலோ பிளாக் கடை நடத்தி வருகின்றனர். இன்று காலை கடையை திறப்பதற்காக கணவன், மனைவி சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ஹாலோ பிளாக் செய்யும் மெஷினை திருடி கொண்டு ஓட முயன்றார்.


 இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர் செய்யாறு அடுத்த சின்ன செங்காடுவை சேர்ந்த தனசேகர் (40)என்பது தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்ட தனசேகரை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 


மேலும் திருட்டு சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


- வெம்பாக்கம் செய்தியாளர் MS.பழனிமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad