ஒரு சிமெண்ட் சாலைக்கு இரண்டு திறப்பு விழா நடந்த விநோதம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 June 2023

ஒரு சிமெண்ட் சாலைக்கு இரண்டு திறப்பு விழா நடந்த விநோதம்.


திருவண்ணாமலை நகராட்சி கடம்பராயன் தெருவில் போடப்பட்ட சிமெண்ட் சாலைக்கு இரண்டு திறப்பு விழா நடைபெற்றது.அப்பகுதி மக்களிடையை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி 16-வது வார்டில் உள்ள கடம்பராயன் தெருவில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. 

நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டன. மக்களின் பங்களிப்பாக ரூ.10லட்சம்வழங்கப்பட்டன.16-வது வார்டு கவுன்சிலரான அதிமுகவைச் சேர்ந்த சந்திர பிரகாஷின் முயற்சியால், வர்த்தக வீதிகளில் முக்கியத்துவம் பெற்ற கடம்பராயன் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்பட்டகுப்பைகளை சேகரிக்கவும் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.


சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திறப்பு விழா (ஜுன் 5-ம் தேதி) நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், போளூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார் . இதன் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது . புதிய சாலையில் வாகனங்கள் இயக்கபட்டன. அதிமுக கவுன்சிலர் நடத்திய திறப்பு விழாவிற்கு போட்டியாக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் ஜூன் 6 தேதி மீண்டும் ஒரு திறப்பு விழா நடைபெற்றது. 


இதில் நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் திறந்து வைத்தார் .பயன்பாட்டு வந்த சாலைக்கு மீண்டும் ஒரு திறப்பு விழா நடத்தப்பட்டது. நேற்று அதிமுக, இன்று நகராட்சி, நாளை யார் ? என்ற கேள்வி 16 வது வார்டு பகுதி மக்களிடம் எழுந்துள்ளது .


- செங்கம் தாலுகா செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad