செங்கம் அருகே பொக்லைன் மீது இரு சக்கர வாகனம் மோதல்; இரு வாலிபர்கள் பலி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 June 2023

செங்கம் அருகே பொக்லைன் மீது இரு சக்கர வாகனம் மோதல்; இரு வாலிபர்கள் பலி.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பொக்லைன் இயந்திரம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இரு இளைஞா்கள் பலியாகினா்.செங்கத்தை அடுத்த கொட்டகுளம் கிராமத்தைச் சோந்த அசோகன் மகன் அரவிந்த் (17), மண்ணப்பன் மகன் ரோசன்(17), ராஜேந்திரன் மகன் விஜய் (17). மூவரும் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனா். 

இந்த நிலையில், மூவரும் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் அம்மாபாளையம் பகுதியில் இருந்து கொட்டகுளம் கிராமத்துக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா். சுண்டகாபாளையம் பகுதியில் சென்றபோது, ஏதிரே வந்த பொக்லைன் இயந்திரமும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.


இதில், சம்பவ இடத்திலேயே அரவிந்த் பலியானாா். பலத்த காயமடைந்த ரோசன், விஜய் ஆகியோரை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவரில் ரோசன் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.


விஜய் என்பவர் மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad