திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பணிமனையில் இருந்து வரும் அரசு பேருந்து வண்டி எண். 9 ஆம் நம்பர் அரசு பேருந்து ஆரணியில் இருந்து மேல்புதுப்பாக்கம் சொரையூர் வழியாக பொன்னமங்கலம் வரை சென்று மீண்டும் இதே வழியாக ஆரணி செல்ல கூடிய அரசு பேருந்து சொரையூர் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் பஸ்ஸில் ஏறினால் தகாத வார்த்தையில் பேசி பஸ்ஸில் ஏற கூடாது என்று கடந்த 10 நாட்களாக பஸ்ஸில் ஏற்றாமல் அலை கழித்து உள்ளார் நடத்துனர் மக்கள் மிகவும் மன உளைச்சல் தள்ளப்பட்டு உள்ளனர்.


இதன் மீது திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை.
- செய்யாறு தாலுகா செய்தியாளர் ஸ்டீபன்.
No comments:
Post a Comment