திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விளம்பர பேனர்கள் அமைக்க தடை விதித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.


செங்கத்தில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி மெயின் ரோடு, போளூர் ரோடு, மேலப்பாளையம், தாலுக்கா ஆபிஸ், சார்பதிவாளர் ஆபிஸ், மில்லத்நகர் உள்பட பல்வேறு இடங்களில் வணிகம், அரசியல் கட்சி மற்றும் பள்ளி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.
எனவே செங்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும்,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment