தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் பாசறை சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியின் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் து. பிரகலதா ராம் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து மதுபாட்டில்களுக்கு தூக்கிட்டு, மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது 2018 முதல் 2022 வரை மது போதையில் வாகனம் ஓட்டியதில் 1108 சாலை விபத்தில் 262 பேர் இறந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மதுக்கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கபடுகின்றன. எனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு முழக்கத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment