திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியில் ஆதி திராவிட நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இதில் சேர்க்கை சதவீகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் இணைந்து தலைமை ஆசிரியர் ரகுபதி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்பேத்கர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.


பேரணியின் போது மாணவ மாணவியர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் அரசு பள்ளியில் படித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி ஊராட்சி வீதிகள் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- செங்கம் செய்தியாளர் கலையரசு .

No comments:
Post a Comment