திருவண்ணாமலையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் அரிவாள், மண் வெட்டி, கடப்பாறை, பாணலில் நிலக்கடலையை ஏந்திய படி ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தரமற்ற நிலக்கடலை விதை வழங்குவதாக கூறி வேளாண்துறையை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருந்து கையில் அரிவாள், மண் வெட்டி, கடப்பாறை, பாணலில் நிலக்கடலையை ஏந்திய படி விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு நின்று அரிவாள், மண் வெட்டி, கடப்பாறை, நிலக்கடலை ஆகியவற்றிக்கு பூஜை செய்து, அவர்கள் தரமற்ற நிலக்கடலை வழங்குவதாக கூறி வேளாண்மை துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
- செய்தியாளர் கலையரசு


No comments:
Post a Comment