செங்கத்தில் தேசிய குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 June 2023

செங்கத்தில் தேசிய குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் அப்துல் வாகித் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.


இதில் திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் திருமதி கவிதா மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாணவர்கள் கைகளில் புத்தகத்தை கொடு ! குழந்தைகளை படிக்கவிடு ! பணிக்கு அனுப்பாதே ! பள்ளிகளுக்கு அனுப்பு ! குழந்தைகள் வருமானம் பெற்றோருக்கு அவமானம்! குழந்தைகளின் கல்வி உரிமையை பேணிக் காப்போம்!  குழந்தை தொழிலாளி தடுப்போம் !  மீறினால் 1098 க்கு தகவல் கொடுப்போம்! போன்ற பதாகைகளை மாணவர்கள் கையில் வைத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad