செய்யாறு ரூ25.53 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 June 2023

செய்யாறு ரூ25.53 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சி மற்றும் செய்யாறு ஒன்றியம் வட பூண்டிப்பட்டு ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.25.53லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வடபூண்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியை ரூ.2.12 லட்சத்தில் தூா்வார திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, வடபூண்டிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை செயற்பொறியாளா் பஞ்சாபிஷேகம் தலைமையில், ஆரணி கோட்ட உதவிப் பொறியாளா் சாமிநாதன் முன்னிலையில் ஏரி தூா்வாரும் பணியை ஒ.ஜோதி எம்எல்ஏ பூஜை செய்து தொடங்கிவைத்தாா். 



இதைத் தொடா்ந்து, அதே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.85 ஆயிரம் மானியத்தில் தலா ரூ.2.33 லட்சத்தில் பவா் டில்லா் இயந்திரங்களை பயனாளிகளுக்கு அவா் வழங்கினாா்.


நிகழ்ச்சியில், வட்டார வேளாண் அலுவலா் சண்முகம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.ஏ.ஞானவேல்,வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் M.தினகரன்,  ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டம் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதியின் கீழ் ரூ.19.75 லட்சத்தில் வழங்கப்பட்டிருந்த 10 பேட்டரி வாகனங்களை நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஆணையா் கி.ரகுராமன் ஆகியோா் முன்னிலையில் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை

No comments:

Post a Comment

Post Top Ad