திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அதிமுக சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைத்தலைவர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் நகரத் தலைவர் ஜனார்த்தனன், மற்றும் அருணகிரி, தணிகாசலம், சுரேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை
No comments:
Post a Comment