வீடு கட்ட கடன் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 May 2023

வீடு கட்ட கடன் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவு.


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் புதிய வீடு கட்டி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டுள்ளனர். 


இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் எங்களை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். இது குறித்து அவரது தந்தை அதே பகுதியில் வசிக்கும் மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். 


அப்போது வீடு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். பின்னர் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையத்தில் செந்தமிழ் செல்வியின் அண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜசேகர் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad