திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பெருமாள்பேட்டை பகுதியில் செண்பகத்தோப்பு அணை கமண்டல நதி குறுக்கே கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிரம்பியது.

சென்னை பொதுப்பணித்துறை கூடுதல் சந்தீப் சக்சேனா உத்தரவின் பேரில் இன்று சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். 181.44 கன அடி தண்ணீர் வருகிற 25-ந் தேதி வரை திறக்கப்படுகிறது. இதன்மூலம் 48 ஏரிகள் பாசன வசதி பெறும்.
செண்பகத்தோப்பு அணையில் திறந்து விடும் தண்ணீரை விவசாய பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக 48 ஏரிகளில் தண்ணீர் நிரம்பும் பணி நடப்பதாக பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment