ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 May 2023

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு.


திருவண்ணாமலையில் கடந்த 12/02/23 அன்று நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களின் தொடர் தீவிர முயற்சியால் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பல சாவல்களுக்கிடையே வெளி மாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு 12/05/23 அன்று தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் மரு.நா.கண்ணன், வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரப்பா காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா,புகழ், சுப்பிரமணி, காவல் உதவி ஆய்வாளர் சாபுதீன், நசுருதீன், தலைமை காவலர்கள் பழனிவேல், ஏழுமலை, சரவணன், முதல் நிலை காவலர்கள் முபாரக் 2ம் நிலை காவலர்கள் கலையரசன், குணசேகரன், நாகராஜ், பிரசாத் ஆகியோர்களுக்கு தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்குநர் காவல் படை தலைவர் முனைவர்.சி. சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி ரூபாய் 1,00,000 வழங்கி அவர்களை வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad