
புவனேஸ்வரிக்கு இன்று (வியாழக்கிழமை) பிறந்த நாள் வருவதால், இதனை கொண்டாடு வது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இருவரும் பேசியுள்ளனர். அப்போது, அவர் களுக்குள் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் புவனேஸ்வரி வீட்டின் அறையில் தனியாக தூங்கச் சென்றார். பிரவீன்குமார் மற்றொரு அறையில் படுத்து தூங்கினார். மனைவியை எழுப்புவதற்காக பிரவீன் குமார் நேற்று காலை 6 மணி அளவில் அறைக்கு சென்றார்.
அப்போது புவனேஸ்வரி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் பிரவீன் குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடலை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த புவ னேஸ்வரியின் தாயார் விஜயா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வ ரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் அனா மிகா விசாரணை நடத்தி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- செய்யாறு செய்தியாளர் ஸ்டீபன்
No comments:
Post a Comment