சமூக பாதுகாப்பு திட்டத்தில் கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 May 2023

சமூக பாதுகாப்பு திட்டத்தில் கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகை.


திருவண்ணாமலையில் தமிழ் நாடு அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்காலில் ஊராட்சியில் 12/05/23 அன்று நடைபெற்ற "தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு அவர்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி"என்ற புத்தகத்தினை வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்ட பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி , மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர், கலசப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.  




  செங்கம் தாலுக்கா செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad