இலவச பயணம் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநரை வெளுத்து வாங்கிய பெண். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 May 2023

இலவச பயணம் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநரை வெளுத்து வாங்கிய பெண்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பேருந்து மண்மலை பேருந்து நிலையத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்து நிற்காமல் சென்ற அரசு பேருந்தை வழி மறைத்து ஓட்டுனரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு நடத்துனர் தங்களால் எங்களுக்கு எந்த வருவாய் கிடைப்பதில்லை நீங்கள் செல்வது  ஓசில தான போறீங்க  இதுல எங்கிட்ட சட்டம் பேசுருயா அதற்கு அந்த பெண் உங்கள் வீட்டு பணத்தில்  ஒன்றும் பயணிக்கவில்லை என்று அந்த பெண் ஓட்டுநர் வெளுத்து வாங்கியுள்ளார். அதற்கு அரசு மகளிர் இலவச பயணம் அறிவிப்பை குறித்து ஒட்டுநர் பெண்களை இழிவாக பேசினார். எனவே ஒரு சில அரசு பேருந்து நடத்துனர்களும் இதே போல் பேசி வருகிறார்கள். எனவே இவர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.  


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு. 

No comments:

Post a Comment

Post Top Ad