திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் தொடக்க விழாவும், காவல் நிலைய மனுக்களின் தன்மையை அறிவதற்கான தனி மென் பொருளின் தொடக்க நிகழ்ச்சியும் 10/05/23/ அன்று திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (சட்டம் -ஒழுங்கு) கி.சங்கர் தலைமை வகித்தார். வரவேற்பில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, கலந்து கொண்டனர். முகாமில் காவல் நிலையங்களில் புகார் அளித்து விசாரணையில் திருப்தியடையாதவர் 137 பேர், புதிய மனுதாரர் 437 பேர் என மொத்தம் 574 பேர், இதில் எதிர் மனுதாரர்கள் 250 பங்கேற்று மனுக்களை அளித்தனர்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் என 20 க்கும் மேற்பட்டோரால் மனுக்களின் தன்மைக்கேற்ப 533 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
உடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment