திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மேல்பெண்ணத்தூர் ஊராட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற வரும் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செங்கம் மத்திய ஒன்றிய செயலாளர் அ.ஏழுமலை அவர்கள் வரவேற்பில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி தலைமையில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் தர்மபுரி சத்தியமூர்த்தி திமுக ஆட்சியின் சாதனைகளை குறித்து சிறப்புரை ஆற்றினார்.

நன்றியுரையாக ஒன்றிய துணை செயலாளர் செல்வி பழனிச்சாமி பேசினார். உடன் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment