திருவண்ணாமலை கிரிவலபாதையில் கடந்த இரண்டு நாட்களில் சேர்ந்த 140 டன் குப்பைகளை அகற்றப்பட்டது. திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை வலம் வந்து வழிப்பட்டனர் .

இவ்வாறு வந்த பக்தர்கள் பயன்படுத்தி வீசி சென்ற குப்பை கழிவுகளான வாட்டர் பாட்டில், இளநீர் மட்டை , கரும்பு சக்கை, அன்னதான வழங்கப்பட்ட தட்டுகள், தற்காலிக கடைகளில் உருவான குப்பைகள் என 140 டன் குப்பைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி குப்பைகளை அகற்றப்பட்டன.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment