திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகளான பழனி, அன்பழகன், உள்ளிட்டோர் முன்னிலையில் ஆர்பாட்டத்தில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரம் வழங்கபட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு


No comments:
Post a Comment