இந்த நிகழ்வில் வெம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பக்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் முன்னிலையில் நடைபெற்றது. பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் கோடை விடுமுறையில் மாணவர்கள் தாங்கள் படித்த கதைகள் கூறினர். சிறப்பு அழைப்பாளராக தமிழ் பேராசிரியர் ஆ. மாணிக்கவேலு பங்கேற்று பேசினார்.


மாணவர்கள் சிறு வயதிலிருந்து கதைகள் கூறினால் மாணவர்களின் கற்பனை திறன் அறிவாற்றல் வளரும் என்று கூறினார். இது போன்ற விடுமுறையில் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கூறினார் நீங்கள் இன்று கூறும் கதைகள் நாளை தங்களை சிறந்த படைப்பாளியாக மாற்றும் என்று கூறினார். நிகழ்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பரிசு வழங்கப்பட்டன நிகழ்விற்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்து இருந்தார்.
- வெம்பாக்கம் தாலுகா செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment