திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் விவசாயிகள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் மேற்கொண்டு அதை அழித்தும் நூதன முறையில் கோரிக்கையை எடுத்து கூறினார்கள். இது குறித்து அவர்கள் கூறுவதாவது, ஜமாபந்தி என்பது கண்துடைப்பு போன்று நடக்காமல் உண்மையாக நடைபெற வேண்டும். மனிதனுக்கு இயற்கையான அழகு சிறந்தது. ஒப்பனை அலங்காரம் நிரந்தரம் இல்லை. எனவே நியாயமானதாக ஜமாபந்தி நடைபெறுவது நிரந்தரமான அழகு போன்றது இதனை போன்று அதிகாரிகள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் தான் நாங்கள் ஒப்பனை செய்து அதை கலைத்து கோஷங்களை எழுப்பினோம் என்றனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு


No comments:
Post a Comment