திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி நடைபெற்று வருவதால் திங்கட்கிழமை (மே22) நடைபெற இருந்த வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.


இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி மே 19 முதல் தொடங்கியது.எனவே ஜமாபந்தி முடியும் ஜூன் 1 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று கோட்டாட்சியர் அலுவலங்களில் நடைபெற வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்கள், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப தெரிவித்துள்ளார்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment