மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 May 2023

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சி.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தற்கொலைக்கு முயற்சி, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நாளான்பள்ளம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி அவரது மனைவி பேபியம்மாள் அவரது மகன் பாலகிருஷ்ணன் மகள் சரஸ்வதி இவர்கள் 4 பேரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ  குளிக்க முயன்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களிடம் இருந்த தீப்பெட்டி பறித்து தற்கொலையை தடுத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்களுக்கு சொந்தமான நான்கரை ஏக்கர் விவசாய நிலத்தை அடமானம் வைத்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றதாகவும் தற்போது நிலத்தை விற்று விட்டதாகவும் நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கூலிப்படையினரால் மிரட்டி தாக்குதல் நடத்துவதாகவும் இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது குடும்பத்திற்கு வழங்கி விவசாய மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் இவர்கள் 4 பேரையும் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தனர்


- செங்கம் தாலுகா செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad