அப்போது வேண்டாவும், அவரது கணவர் மணியும், ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்வு செய்தபோது எந்த பணமும் தரவில்லை. எனவே ரூ.30 ஆயிரம் கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கொடுப்போம் என்று கூறினார்களாம்.

இதுகுறித்து திருவண்ணாமலை விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகனிடம் எம்ஜிஆர் புகார் அளித்தார். போலீசார் தெரிவித்தபடி நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்த தலைவர் வேண்டா, அவரது கணவர் மணி ஆகியோரிடம் எம்.ஜி.ஆர் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் மணி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, போளூர் ஒன்றியம் எடப்பிறை ஊராட்சி மன்ற அதிமுக தலைவி ஜீவா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment