திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. செங்கம் பகுதியில் ஜவ்வாது மலை அடிவாரமான குப்பநத்தம், கொட்டவூர், தொட்டி மடிவு, கிளையூர், கல்லாத்தூர், பரமனந்தல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சுமார் 100 ஏக்கரில் வாழை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறவாளி காற்றுடன் பெய்த கனமழையால் காய் முற்றிய நிலையில் உள்ள வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து சேதமடைந்தன. இதை மட்டுமே நம்பி இருந்த விவசாயிகள் மிகவும் வேதனை அளிக்கிறது. சேதமடைந்த வாழை மரங்களை வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு கணக்கீடு செய்து அரசின் மூலம் நிவாரணம் கிடைக்க செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் T.R.கலையரசு
No comments:
Post a Comment