திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கம் உள்ளுர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் நடந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் அன்று வியாழக்கிழமை இரவு 11:59 மணிக்கு தொடங்கி மே 05 வெள்ளிகிழமை இரவு 11:33 நிறைவடைகிறது. இந்நிலையில் முக்கிய பௌர்ணமி தினங்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படுகிறது.
சித்ரா பௌர்ணமிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 1610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு இரயில்கள் இயக்கபடுவதாக தெற்கு இரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment