திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் மற்றும் சுகாதார ஆய்வாளராக கே.சம்பத் உள்ளார். இவர் குழந்தை பிறந்த உடனே பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பிறப்பு சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.


இந்நிலையில் இன்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியர்கள் வளர்மதி, புவனேஸ்வரி, ஜெயப்பிரதா ஆகியோர் கலந்து கொண்டனர். பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் பற்றி மருத்துவர் கூறுகையில், 'பள்ளிகளில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சேர்க்கைக்கான தகுதி வயதை தீர்மானிக்க, தேசிய அளவில் பதிவு செய்வதற்கு காப்பீட்டு விண்ணப்பதாரரின் வயதை தீர்மானிக்க, மக்கள் தொகை பதிவேட்டில் சேர்ப்பதற்கு இன்றியமையாததாக பிறப்பு சான்றிதழ் உள்ளது. மேலும் குழந்தை பிறக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பிறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இவற்றினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
- வெம்பாக்கம் தாலுகா செய்தியாளர் MS.பழனிமலை
No comments:
Post a Comment