திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் இருந்து தாமரை குளத்திற்கு செல்லும் சாலை உள்ளது.சுமார் 2 கி.மீ தொலைவிலான இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.


மேலும் சாலையில் டிராக்டர் போன்ற வாகனங்கள் சென்று பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.குடியிருப்பு வாசிகளின் அவசர தேவையான 108 ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாமல் உள்ளது முதியோர்களும் கர்ப்பிணி பெண்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியாளர் நேரில் பார்வையிட்டு சாலை ஆகிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment