

அதன்படி தண்டராம்பட்டு தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று தொடங்கி 23ம் தேதி வரையும், திருவண்ணாமலை தாலுக்காவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று முதல் தொடங்கி 23 ம் தேதி வரையும் , செய்யாறு தாலுக்காவில் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று முதல் தொடங்கி 30ம் தேதி வரையும், ஆரணி தாலுக்காவில் உதவி ஆட்சியர் தலைமையில் இன்று முதல் தொடங்கி 25ம் தேதி வரையும் செங்கம் தாலுக்காகளில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தலைமையில் இன்று முதல் தொடங்கி 25ம் தேதி வரையும்,கலசப்பாக்கம் தாலுக்காவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் இன்று முதல் தொடங்கி 23ம் தேதி வரையும் , வந்தவாசி தாலுக்காவில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் இன்று முதல் தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரையும், சேத்துப்பட்டு தாலுக்காவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தலைமையில் இன்று முதல் தொடங்கி 24ம் தேதி வரையும், ஜமுனாமரத்தூர் தாலுக்காவில் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் தலைமையில் இன்று முதல் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே இன்று 19ம் தொடங்கி ஜூன் 1 தேதி வரை நடக்கும் ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களின் மூலம் தொடர்புடைய தாலுக்காவில் கூட்டம் நடத்தும் அலுவலரிடம் கொடுத்து பயன் பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப தெரிவித்துள்ளார்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment