திருவண்ணாமலை காஞ்சி சாலை இயற்கை நிறைந்த புனல் காடு பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைத்தால் அங்கு எரிக்கபடும் குப்பைகளின் எரிவாயு புகையினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கு காற்று மாசுபட்டு தொற்று நோய்கள், சுவாச கோளாறு போன்றவைகள் உருவாக கூடும்.எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இங்கு குப்பை கிடங்கு அமைக்க கூடாது என பொதுமக்கள் விவசாயிகள் முகாமிட்டு 3 வேளையும் சமைத்து சாப்பிட்டு உறங்கியும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழ் நாடு விவசாய சங்கம் சார்பில் 14/05/23 ஞாயிறு கிழமை அன்று கஞ்சி காய்ச்சி குடித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment