திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நேருநகர் பகுதியில் புரட்சியாளர்.டாகர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்பு சமூக விரோதிகள் சிலர் புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்துத்தை கிழித்தும், வாலிபர் சங்கத்தின் கொடிகளை சேதப்படுத்ததிருந்தனர்.
பின்னர் சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி செங்கம் வழி ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் காவல்துறையினர் இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்த பின் வீர முழக்கத்துடன் பேரணியாக சென்று கருத்தரங்கம் தொடங்கப்பட்டது.

விழாவில் வாலிபர் சங்கம் மாநில துணை செயலாளர் பழனி , வாலிபர் சங்கம் துணை பொதுச் செயலாளர் செல்வன், மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் ,மாவட்ட செயலாளர் பிரகாஷ் , தோழமை சங்க தலைவர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment