இந்த ஆண்டுக்கான பவுர்ணமி 04-5-23 அன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி அடுத்தநாள் 05-5-23 இரவு 11.33 மணிக்கு நிறைவு அடைகிறது.இதனால் நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகரத்திற்குள் செல்ல அனுமதி இல்லாததால்,நகர எல்லையில், தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அங்கிருந்து நடந்தே வந்தனர். மேலும் ஆட்டோகள் இயக்கப்பட்டன. சிறு வியாபாரிகள், ஆங்காங்கே ரோட்டோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

கற்பூரம் தண்ணீர் பாட்டீல் வியாபாரம் சூடு பிடித்தது. பக்தர்களுக்கு இலவச தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. 20 லட்சம் பக்தர்கள் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல கிரிவலம் செல்கின்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பிய வண்ணம் செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்,I.A.S. அவர்கள் தலைமையில் சித்ரா பௌர்ணமி ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
13 தற்காலிக பேருந்து நிலையங்கள்,1160 பேருந்துகள் நிறுத்தும் வசதி,1958 பேருந்துகள்,55 இலவச கார் பார்க்கிங் வசதி,11475 கார்கள் நிறுத்தும் வசதி,,கோவிலில் இருதய மருத்துவர் உள்பட 3 மருத்துவ முகாம்கள்,கிரிவலப் பாதையில் 300 கண்காணிப்பு கேமராக்கள், ஆக இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளை செய்து தர முற்கூட்டியே அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் P.K.சேகர் பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் I.A.S, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,I.P.S, மாநில தடகள துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மற்றும் மாவட்ட நிர்வாகம், தாலுகா நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தினரை பக்தர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment