தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டத்தில் கலைஞரின் பேனா தலை கவிழ்ந்த போதெல்லாம் தமிழ்ச் சமூகம் தலை நிமிர்ந்து எம்.எஸ்.தரணிவேந்தன் பேச்சு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 April 2023

தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டத்தில் கலைஞரின் பேனா தலை கவிழ்ந்த போதெல்லாம் தமிழ்ச் சமூகம் தலை நிமிர்ந்து எம்.எஸ்.தரணிவேந்தன் பேச்சு.


திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வந்தவாசி மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில், ஆராசூர் கூட்டுச்சாலையில்,  ஏ.எஸ்.பிரபு நினைவுத்திடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70துபிறந்தநாள் விழா மற்றும் பட்ஜட் விளக்க பொதுக்கூட்டம், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்றது.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி, பொதுக்குழு உறுப்பினர் அப்சர் லியாகத்,சச்சிதானந்தம்  முன்னிலை வகித்தனர்.மாவட்ட பிரதிநிதி எம்.கே.சி.மணி அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர்எம்.எஸ். தரணி வேந்தன்,தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, பொள்ளாச்சி சித்திக் சிறப்புரையாற்றினார்.


தென்னாங்கூரில் அரசு கலைக்கல்லூரிக்கு கையெ ழுத்துப் போட்ட பேனாவிற்குத் தான் நினைவுச் சின்னம்.நம்ம பகுதி அம்பேத்குமாரை எம்எல்ஏ வாக அடையாளம் காட்டிய அந்த பேனாவுக் குத்தான் நினைவுச் சின்னம். மொத்தத்தில் கலைஞரின் பேனா தலைகவிழ்ந்த போதெல்லாம் தமிழ்ச்சமூகம் தலை நிமிர்ந்தது என்று பேசினார்.


இந்த கூட்டத்தில்  ஒன்றிய செயலாளர்கள் டி.டி. இராதா, கே.டி.இராமசாமி, எ.தயாளன் சி.ஆர்.பெருமாள், எ.சுந்தரேசன், தேசூர் பேரூர் செயலாளர் டி.கே.மோகன், பெரணமல்லூர் பேரூராட்சி தலைவர்  வேணி ஏழுமலை, நகர்மன்ற தலைவர் எச்.ஜலால், தெள்ளாறு வி.ராமு, ஆ.கோபிநாதன், சேத்பட் முருகன், பொறியாளர் அணி கே.யுவராஜா, மாணவர் அணி ம.கிஷோர்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இளங்கோ, நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேற்கு ஒன்றிய இளைஞர் அணி மதன்குமார் நன்றி கூறினார்.


- செய்யாறு தாலுகா செய்தியாளர் MS.பழனிமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad