திருவண்ணாமலை கிரிவலபாதையில் காப்புகாடு மற்றும் புனல் காடு பகுதிகளில் வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கிரிவலபாதை காஞ்சி கூட்டுசாலையில் புள்ளிமான் ஒன்று நாய்கள் கடித்த நிலையில் அருகில் உள்ள ஓட்டலில் புகுந்துதது உடனே ஓட்டல் உரிமையாளர் அருகில் உள்ள காவலரிடம் தகவலை தெரிவித்தார்.
காவலர் மானுக்கு முதலுதவி செய்து வனத்துறையினரிடம் மானை கால்நடை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல் கிரிவலபாதை மற்றும் காஞ்சி செல்லும் புனல் காட்டு பகுதியிலும் தண்ணீரை தேடி வெளியே வந்த மானை அங்கு உள்ள நாய்கள் கடித்து குதறியது.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment