திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கழக செயல் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி. MLA.மாவட்ட துணை செயலாளர் தலைமையில் கழக இலக்கிய அணி இணை செயலாளர் (ம) தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் சிறப்புரை ஆற்றினார். உடன் தண்டராம்பட்டு ஒன்றிய கழக செயலாளர் மு.பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி,கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுகா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment