திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் பந்தலை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் எச்.ஜலால், தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஏ.தயாளன், துணைத் தலைவர் க. சீனிவாசன், அவைத் தலைவர் நவாப் ஜான், முன்னாள் நகர செயலாளர் எஸ். அன்சாரி மாவட்ட பிரதிநிதிகள் குடியரசு இப்ராகிம் சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் எம். எஸ். தரணி வேந்தன் திறந்து வைத்தார். பழ வகைகளை எம். எல்.ஏ.எஸ். அம்பேத்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் கிஷோர் குமார், அசினா கன்செய்யது, நதியா மணிகண்டன், சரவணக்குமார்,ரிகானா சையத் அப்துல் கரீம், சந்தோஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் புதிய பஸ் நிலையம் இனிப்பு சாலையில் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
- செய்யாறு தாலுகா செய்தியாளர் MS.பழனிமலை.

No comments:
Post a Comment