மலை வாழ் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க கோரிக்கை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 April 2023

மலை வாழ் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க கோரிக்கை.


திருவண்ணாமலை மாவட்டம் மலைவாழ் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என செங்கம் சட்ட மன்ற உறுப்பினர்  மு பே கிரி சட்ட பேரவையில் வேண்டுகோள்.  

திருவண்ணாமலை மாவட்டதிற்குட்பட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள், குறவர் இனமக்கள் லம்பாடி இனமக்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சி  காலத்தில் அவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்  அச்சான்றிதழ் நிறுத்தப்பட்டுள்ளது.


எனவே பள்ளி மாணவர்களுக்கும், தொழில் முனைவோர்களின் உரிமை மறுக்கப்படுகிறது எனவே அம்மக்களுக்கு மீண்டும் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர்  முபே. கிரி வருவாய்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad