செங்கம் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 April 2023

செங்கம் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக செங்கம் தீயணைப்பு நிலையம் சார்பில் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்  முரளி தலைமையில் செங்கம் காவல் ஆய்வாளர் யேசுராஜ் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய தெருக்களில் சென்று தீ தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:

Post a Comment

Post Top Ad